0044 7426740259

கனகசபை பரராஜசிங்கம் மரண அறிவித்தல்.

FEB

18

புத்தூர் கிழக்கு காளியானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பரராஜசிங்கம் 18.02.2021 இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கரத்தினத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நல்லையா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரோசாதேவி, ரஞ்சினிதேவி (சுவிஸ்), உதயகுமாரி, இராசகுமாரி, சிவகுமாரி (பிரான்ஸ்) மதிரூபன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீகாந்தன், தவராசா (சுவிஸ்), துரைலிங்கம்,தவரராசசிங்கம், சிவரூபன் (பிரான்ஸ்), சாந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சங்கீதா, கெளதமன் (கனடா), நர்த்தனா, அனோஜா (சுவிஸ்), அஜிந்தன் (சுவிஸ்), அஞ்சனா (சுவிஸ்), தர்சிகா, அர்ச்சிகா, அற்புதா, லக்சனா (பிரான்ஸ்), தனுஜா (பிரான்ஸ்), தேனுஜன் (கனடா) மித்திலா (கனடா), இனியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (19.02.2021) வெள்ளிக்கிழமை புத்தூர் காளியானையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நண்பகல் 12 மணியளவில் அந்திரானை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல் குடும்பத்தினர் 0774005930/0770757195
குடும்பம்
தொலைபேசி: 0774005930
புத்தூர் கிழக்கு காளியானை, , புத்தூர் கிழக்கு காளியானை
தேதி: 19.02.2021
முகவரி: அந்திரானை இந்து மயானம்

Share This