0044 7426740259

சிங்கப்பூர்-மலேசியா இடையே பரிவு...!!

L.சுதா May 04, 2021

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே எதிர்வரும் 17ஆம் திகதியிலிருந்து பரிவு அடிப்படையிலான பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி, உறவினர்கள் மாண்டாலோ, உடல்நலம் மோசமாக இருந்தாலோ மலேசியர்களும் சிங்கப்பூரர்களும் எல்லையைக் கடக்கலாம். 02 நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சிங்கப்பூரில், அது குறித்து அதிகாரபூர்வ இணக்கம் கண்டுள்ளனர். பரிவு அடிப்படையிலான பயணங்களுக்கான விவரம் விரைவில் வெளியிடப்படும் என கருதப்படுகிறது.

சென்ற ஜூலையில் முதன்முறை திட்டத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே நீடிக்கும் விரிவான உறவின் காரணமாக அந்தத் திட்டம் தேவைப்படுவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இரு நாட்டுக்கும் இடையே பெரிய அளவிலான எல்லை தாண்டிய பயணங்கள் குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும். அமைச்சர்கள் சந்திப்பின்போது அது குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இரு நாட்டிலும் நிலவும் கிருமித்தொற்றுச் சூழல் தணியும்வரை அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மலேசிய - சிங்கப்பூர்ப் பிரதமர்களின் சந்திப்பை உறுதி செய்யத் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும். பாதுகாப்பான பயண முறையைக் கொண்டுவர இரு நாட்டுப் போக்குவரத்து அமைச்சுகளும் மேலும் பேச்சு நடத்த வேண்டும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் கூறினார்.

இரு நாட்டுத் தடுப்பூசி சான்றிதழ்களின் அங்கீகாரத்துக்கான பணிகள் நடைபெறுவதாகக் கூறிய திரு. ஹிஷாமுதீன், தொடர்புத் தடம் கண்டறியும் செயலிகள் இரு தரப்புக்கும் ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!