0044 7426740259

தாயிடம் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம்..!!!

P. அனு July 22, 2021

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் குறித்து அவரது பொற்றோர் உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 2 விசேட விசாரணை குழுக்கள் நேற்று டயகம பகுதிக்கு சென்று விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தன என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறுமியின் தாயிடம் 2ஆம் நாளாகவும் நேற்று சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதேநேரம் குறித்த சிறுமியை ரிசாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து சென்ற தரகரிடம் இன்று (22.07.2021) வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு சென்ற 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனில்லாமல் அவர் உயிரிழந்திருந்தார்.

அதனை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தொடர்பாக அறியவந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
கருப்பட்டி இட்லி..!!!