0044 7426740259

புகை பிடித்தால் சருமத்தில் என்ன பாதிப்புகள் ஏற்படும்.!

v.சுபி April 08, 2021

சிகரெட் புகைப்பது நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை. வெளிப்புற சருமத்திற்கும் கேடு உண்டாக்கும். எந்தெந்த வகையில் சருமத்திற்கு என்னென்ன பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பது குறித்து பார்ப்போம்.

கண் சோர்வு: இரவில் தூங்கி எழுந்த பிறகும் உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு சில சமயம் ஏற்படும். புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு இத்தகைய சோர்வு 04 மடங்கு அதிகமாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகை பழக்கத்திற்கு அடிமையாவது தூக்கத்தை பாதிக்கும். அப்படி தூக்கமின்மையால் அவதிப்பட்டால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும்.

சரும சுருக்கம்: வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் புகை பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கம் எட்டிப்பார்க்கத்தொடங்கிவிடும். புகை பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு வயது அதிகமான தோற்றம் உருவாகிவிடும். அத்துடன் சரும திசுக்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் ரத்த வினியோகத்தை புகைப்பழக்கம் தடை செய்துவிடும். ரத்த ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் சருமம் பொலிவை இழந்துவிடுகிறது.

முடி பாதிப்பு: புகைப்பழக்கம் முடியையும் பாதிக்கும். புகையிலையில் இருக்கும் வேதிப்பொருட்கள் மயிர்க்கால்களில் இருக்கும் டி.என்.ஏ.வை சேதப்படுத்திவிடும். புகைப்பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் முடி மெலிந்து வலுவிழந்து காணப்படும். விரைவில் நரை முடி பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். புகைப்பிடிப்பவர்களின் முடி அதிகமாக உதிரும். அதனால் அவர்களுக்கு விரைவில் வழுக்கையாகிவிடும். புகைபிடிப்பவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அது தாமதமாகவே குணமாகும். நிகோட்டினால் அவர்களது இரத்த நாளங்கள் சுருங்கிப்போவதுதான் அதற்கான காரணமாகும்.

நிறமாற்றம்: புகைபிடிப்பவர்களின் சரும நிறத்தில் மாறுதல் ஏற்படும். புகையில் இருக்கும் கார்பன்மோனாக்ஸைடு சருமத்திலுள்ள ஆக்சிஜனை இடம் பெயர வைத்துவிடும். அதிலிருக்கும் நிகோடின் இரத்த ஓட்டத்தை குறைக்கும். அதனால் சருமம் உலர்ந்து, மென்மையை இழந்து நிற மாற்றத்திற்குள்ளாகும். புகைப்பழக்கம் வைட்டமின் சி உள்பட பல ஊட்டச்சத்துக்கள் இழப்புக்கும் காரணமாக அமைந்துவிடும். இந்த சத்துகள்தான் சருமம் சேதமடையாமல் பாதுகாக்க உதவுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!