0044 7426740259

பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்...!

v.சுபி April 08, 2021

இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவமடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை உண்டாகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட உண்டாகும். 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று உண்டாகாமல் பாதுகாக்கும். தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையாக மாறும். அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும். சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பும், துர்நாற்றமும் கூட ஏற்படலாம். இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, இரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை உண்டாகாமல். மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.

மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!