ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (07.04.2021) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இங்கு தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்கதேல வரவேற்றார்.
தலதா மாளிகை வளாகத்தில் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க சங்கைக்குரிய வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்த ஜனாதிபதி, தேரரின் நலம் விசாரித்ததுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
அஸ்கிரி மகா விகாரையின் காரக சங்க சபிக்க பதுலு முத்தியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய முருத்தெனியே தம்மரத்தன தேரரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டார்.