0044 7426740259

காகிதப் போத்தல் உண்மையில் பிளாஸ்டிக் போத்தலா?

v.சுபி April 11, 2021

காகிதப் போத்தல் என்று கூறி, வாடிக்கையாளர்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தியதற்கு Innisfree எனும் அழகுப் பராமரிப்பு நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. அது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

Innisfree கடந்த ஆண்டு 'காகிதப் போத்தல்' என பொட்டலத்தின் மீது சொற்களை எழுதி, அழகுப் பராமரிப்புப் பொருளை அறிமுகம் செய்தது. பிளாஸ்டிக் பொட்டலங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாக அது வெளியிடப்பட்டது.

ஆனால் அது காகிதப் போத்தல் இல்லை. உண்மையில் பிளாஸ்டிக் போத்தல் என்று நிரூபிக்கும் படங்களை வாடிக்கையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். போத்தலைப் பாதியாக வெட்டிப் பார்த்ததில், அதன் உறை மட்டுமே காகிதத்தால் செய்யப்பட்டது என்றும் அதற்கு உள்ளே இருப்பது பிளாஸ்டிக் போத்தல் என்றும் படங்கள் காட்டின.

அதனைத் தொடர்ந்து இணையவாசிகள் பலர் நிறுவனத்தைச் சாடினர். வாடிக்கையாளர்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தியதற்கு Innisfree மன்னிப்புக் கேட்டதாக கூறப்படுகின்றது. மேலும் 'காகிதப் போத்தல்' என்ற சொற்கள், காகித உறையைக் குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன என்றும் முழுப் பொட்டலத்தை அல்ல என்றும் அது தெரிவித்துள்ளது.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!