0044 7426740259

புதுமணத்தம்பதிகளின் படுக்கையில்..!!!

v.சுபி May 04, 2021

கணவன்-மனைவி இடையேயான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்களிடையேயான தாம்பத்திய உறவும் குறிப்பிடத்தக்க பங்கு கொள்கின்றது. தாம்பத்ய உறவை சிறப்பாக அமைத்துக்கொள்ள ஆர்வமும், செயல்பாடும் அவசியமானதாகும். தாம்பத்திய ஆர்வத்தை தூண்டவும், செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கவும் சிலவகை உணவுகளால் இயலும். உலகளாவிய உணவியல் நிபுணர்கள் அதுபற்றி தெரிவிக்கும் கருத்துக்களை பார்ப்போம்.

புராதன ரோமில் வீனஸ் தேவதையின் பழமாக வர்ணிக்கப்பட்டது ஸ்ட்ராபெர்ரி. பிரான்ஸ் நாட்டின் கிராமப்பகுதிகளில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இப்போதும் ஸ்ட்ராபெர்ரி பழ சூப் கொடுத்து வரவேற்கிறார்கள். அவர்கள் தேனிலவு நாட்களை உற்சாகமாக கொண்டாட இந்த பழங்களில் இருக்கும் சத்து உதவும். ஸ்ட்ராபெர்ரி பழங்களில் உள்ள வைட்டமின்-சி சத்து தான் அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் உணர்வை தூண்டும் இந்த பழங்களை ஒரு கோப்பை நிறைய அள்ளி வைத்துக்கொண்டு அருகிலே கிண்ணம் நிறைய கிரீமை நிரப்பி, அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை முக்கி புதுமணத்தம்பதிகள் படுக்கைக்கு செல்லும் முன்பு சுவைப்பார்கள்.

ஏலக்காயை தாம்பத்ய உணர்வைத் தூண்டும் உணவுப்பொருளாக உலகமே கொண்டாடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏலக்காயை விற்பனை செய்யும் அரேபிய வியாபாரிகள் ஏலக்காயை ‘தாம்பத்ய மருந்து’ என்றே விற்பனை செய்கிறார்கள். சிறந்த மணத்துடன் வாயுவுக்கு எதிராக செயல்படும் ஏலக்காயை தாம்பத்ய உறவுக்கு முன்பு சாப்பிடவேண்டும். இந்தியாவின் முதல் செக்ஸாலஜிஸ்ட்டான வாத்சாயனார் ‘தம்பதிகள் முத்தத்தை தொடங்குவதற்கு முன்னால் ஏலக்காயை உட்கொள்ளவேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏலக்காயும், வெற்றிலையும் சேர்ந்த கலவை வாய் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.

தாம்பத்ய ஆற்றலை மேம்படுத்தும் சக்தி பூண்டுவுக்கும் இருக்கிறது. பூண்டுவையும், மல்லித்தழையையும் ஒன்றாக்கி இடித்து, நாட்டு மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டு உறவுகொள்ளும் பழக்கம் பல்வேறு நாட்டு ஆண்களிடம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. கிரேக்க தத்துவ விஞ்ஞானியான அரிஸ்டாட்டிலும் பூண்டுவில் இருக்கும் தாம்பத்ய சக்தி பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஆண்மை உத்வேகத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை போக்கும் ஆற்றல் பூண்டுவுக்கு உள்ளதாக ஆயுர்வேதமும் குறிப்பிடுகிறது. ஆணுறுப்பில் இருக்கும் தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளை போக்கும் மருந்தாக செயல்படும் பூண்டுவை அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடாது. சிறிதளவு பூண்டுவை நல்லெண்ணெய்யிலோ, பசு நெய்யிலோ வறுத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!