0044 7426740259

வெப்ப சூட்டை தணிக்கும் முளைக்கீரை!

v.சுபி May 04, 2021

கீரைகளில் முளைக்கீரை தனித்துவமானது. சாதாரணமாக தெருக்களில் கூட கிடைக்கக்கூடியது. வீட்டிலும் வளர்க்கலாம். முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்து, மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் இருப்பதால், உடல் வலுவடைய உதவுகிறது. வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும்.

*கீரையில் உள்ள இரும்பு மற்றும் தாமிரச்சத்துக்கள் ரத்தத்தைச் சுத்தம் செய்வதோடு, மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

*முளைக்கீரையுடன் அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

*முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.

*முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள்மூலம், பௌத்திரக்கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.

*முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!