0044 7426740259

ஐ.பி.எல் தொடரை ரத்து செய்து பி.சி.சி.ஐ அறிவிப்பு..!!!

P. அனு May 04, 2021

வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடுமையாக பரவி வரும் சூழலிலும், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் பயோ பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா சூழலில் ஐ.பி.எல் போட்டியை நடத்துவது அவசியமா? என்றும், தொடரை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்கள் எழுந்து வந்தன.

இந்த சூழலிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா மற்றும் டெல்லி அணியின் அமித்மிஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கபட்டு புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!