0044 7426740259

சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லையாம்..!!!

P. அனு May 04, 2021

கொரோனா வைரஸ் தற்போது ஐ.பி.எல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும் சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியை ஒத்திவைக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் மற்ற சிஎஸ்கே வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கான முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. மற்ற சிஎஸ்கே வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது வெளிவந்த தகவலின் படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு 2வது பரிசோதனை செய்யப்பட்டதில் சிஎஸ்கே சிஇஓ காசிக்கு நெகட்டிவ் என வந்திருக்கிறது.

ஆனால் மற்ற இருவருக்கும் அப்படி இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து எந்தொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!