0044 7426740259

பிசிசிஐ அறிவித்த புதிய திட்டம்..!!!

P. அனு May 04, 2021

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை தீயாய் பரவி வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின், பாட் கம்மின்ஸ், தவான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஐ.பி.எல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சி.எஸ்.கே வின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன் பிறகு சிஎஸ்கே வீரர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் வந்திருக்கிறது.

இதன்காரணமாக தற்போது பிசிசிஐ புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் இனி நடைபெறாது. மீதமுள்ள சகல போட்டிகளும் மும்பையில் மைதானத்தில் தான் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய் பாட்டீல் மைதானம் மற்றும் பிராபோர்ன் மைதானம் ஆகிய மூன்று மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இதனால் தற்போது பிசிசிஐ மும்பையில் உள்ள விடுதியில் வீரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!