0044 7426740259

நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்..!!!

P. அனு May 04, 2021

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கை அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்து வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அமைந்தகரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும், 6,000ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க, பிரித்தானியா போன்ற நாடுகள் தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்கி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் கட்டணம் வைத்து விறப்னை செய்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தி தொடங்க வேண்டும் என்றும், மாநிலத்தின் உள்ளே மற்றும் வெளியே போக்குவரத்து நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்றம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!