0044 7426740259

தமிழக காவல்துறைக்கு பாஜக வலியுறுத்தல்..!!

P. அனு May 04, 2021

சென்னையில் அம்மா உணவகம் சேதப்படுத்திய திமுகவினரின் செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்தனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு விநியோகிக்கப்பட்டு வந்தது பெரும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், திமுகவினர் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனத்திற்குள்ளாகியது.

இதனிடையே, அம்மா உணவகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்த திமுக, மீண்டும் அந்த பெயர் பலகையை இருந்த இடத்திலேயே பொருத்தி நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், திமுகவினரின் இந்த செயலுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அம்மா உணவகம்‌ ஏழை மக்கள்‌ பசியுடன்‌ வாடக்‌ கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில்‌ முன்னாள்‌ முதல்வர்‌ புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய முத்தாய்ப்பு திட்டமாய்‌ கொண்டு வரப்பட்டது.

மிக மிக குறைவான விலையில்‌ ஏழை மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு உணவு அளித்து அம்மா உணவகம்‌ சேவை செய்து வருவதை அனைவரும்‌ அறிந்ததே.

சென்னை மதுரவாயல்‌ பகுதியில்‌ செயல்பட்டு வரும்‌ அம்மா உணவகத்தின்‌ பெயர்‌ பலகைகள்‌, விலைப்பட்டியல்‌ போன்றவற்றை, திராவிட முன்னேற்றக்‌ கழகத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌, அடித்து நொறுக்கிய வீடியோ காட்சிகளைப்‌ பார்த்து மிகவும்‌ அதிர்ச்சி அடைந்தேன்‌.

இந்த சம்பவம்‌ மிகவும்‌ கண்டிக்கத்தக்கது.அவர்கள்‌ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.‌ இதுபோன்ற சம்பவங்கள்‌ தமிழகத்தில்‌ எந்த இடத்திலும்‌ இனி நடைபெற கூடாது.

அதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்‌ என தமிழக காவல்துறையை
கேட்டுக்கொள்கிறேன்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!