0044 7426740259

முக்கிய விரதங்களும் அதன் முழு பயன்களும்..!!

v.சுபி June 10, 2021

விரதங்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியல் ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்துள்ளனர். அறிவியல் தகவல்களை வேறு ஒரு பதிவினில் காண்போம். இப்பொழுது இந்த பதிவில் விரத வழிபாடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்தால் நம் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் எல்லாம் விலகி மனஅமைதி ஏற்படும். விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் கவலை தீர்ந்து பூரண அருள் கிட்டும். சிரவண விரதம் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகி, ஆனந்தம், சந்தோசம் உண்டாகும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் வறுமை நீங்கி, செல்வவளம் கிட்டும். சஷ்டி விரதம் முருகனுக்கு இருந்தால் மனதில் எண்ணிய காரியம் அனைத்தும் இனிதே நிறைவேறும். கெளரி நோன்பு இருந்தால் குறையாத செல்வம், நீண்ட ஆயுள், நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும்.

வரலக்ஷ்மி விரதம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி ஒற்றுமை நிலைத்து இருக்கும். பிரதோஷ விரதம் இருப்பதால் மன அமைதி ,நீண்ட ஆயுள்,செல்வவளம் கிடைக்கும். மகா சிவராத்திரியில் சிவனை நினைத்து விரதம் இருந்தால், அய்யனின் அருளும், அனைத்து நன்மைகளும் கிடைக்கும். வைகாசி விசாகம் விரதத்தினால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும்.

நவராத்திரி விரதம் இருந்தால் மன நலம், நீண்ட ஆயுள், குன்றாத செல்வம் கிடைக்கும். முப்பெரும் தேவியரின் அருள் நம் இல்லத்தில் நிலைத்து இருக்கும். பெளர்ணமி விரதம் இருந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி,சுகமான வாழ்வு அமையும். கார்த்திகை விரதம் இருப்பதால் எல்லாவித நன்மைகளும் கிடைப்பதுடன், முருகனின் பரிபூரண ஆசி கிட்டும்.

கோகுலாஷ்டமி விரதத்தினால் மனநிம்மதி, நல் ஆயுள், கண்ணனின் அருளும் கிடைக்கும். விரதம் இருக்க முடியாதவர்கள் உள்ளன்புடன் ஒரு பூ, கற்கண்டு, பேரீச்சம் பழம், பழம் ஏதாவது ஒன்றை வைத்து, எந்த கடவுளை நினைத்து வணங்கினாலும், நம்முடைய குரலுக்கு செவி சாய்த்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மை எல்லையில்லா ஆனந்ததிற்கு அழைத்து செல்வர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?