0044 7426740259

இளநரை வராமல் இருக்க என்ன செய்யலாம்?

v.சுபி June 10, 2021

இளநரை வராமல் இருக்க என்ன செய்யலாம்?

வைட்டமின் பி 12 சத்துக்குறைபாடு, இளநரை ஏற்பட மிக முக்கிய காரணமாக உள்ளது. வைட்டமின் பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்ற சத்துக்கள் இளநரை வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆகையால் உணவில் இந்த சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்

* தைராய்டு ஹார்மோன்களின் பிரச்சனை உண்டானால் அது இளமையிலேயே தலைமுடி நரைக்க ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்குத்தான் தைராய்டு ஹார்மோன் பிரச்சனை அதிகம் ஏற்படும். எனவே அறிகுறிகளை கவனமாக கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான மருத்துவம் மேற்கொண்டால் இளநரை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

* முடி பராமரிப்பு பொருள்களாக லோஷன், கண்டிஷனர் போன்றவற்றை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதாலும் இளநரை ஏற்படலாம். கலரிங், பிளீச்சிங் மற்றும் இரசாயனப்பொருள்கள் நிறைந்த ஷாம்புக்களை அடிக்கடி தலையில் தேய்த்து குளிப்பதாலும் இளநரை உண்டாகலாம். எனவே முடிந்த வரை தலைமுடியில் பாதிப்பு ஏற்படாதவாறு இயற்கை முறையில் பராமரித்து வர வேண்டும்

* மன அழுத்தத்துக்கு நோ சொல்லுங்க. மன அழுத்தத்துக்கும் இளநரைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

கூந்தலை கருமையாக்கும் வழிகள்

இயற்கை முறையில் விளைந்த மருதாணி, அவுரி இலையை காயவைத்த பொடியாக்கி கலரிங் செய்ய பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை, மருதாணி, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். இவை எல்லாவற்றையும் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வரலாம்.

கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவது, கறிவேப்பிலையில் டீ தயாரித்து குடிப்பது போன்றவையும் இளநரை குறைபாட்டை சரிசெய்ய உதவும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது நல்லது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?