0044 7426740259

போர்க்கொடி தூக்கியுள்ள மைத்திரி தரப்பு..!

s.திலோ June 10, 2021

இலங்கையில் மறுபடியும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை அளிப்பதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஆங்கில மொழிக்கு முதன்மை இடத்தை அளிப்பதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்வதால் விபரீத நிலைமையே ஏற்படுமென வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது.

நாடு சுதந்திரம் பெற்ற காலப்பகுதிக்குப் பின் இருந்து சிங்களம், தமிழ் மொழிக்கு இருந்து வருகின்ற முதன்மை இடத்தை தற்போதைய கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கம் மாற்றியமைக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

ஆங்கில மொழிக்கு முதன்மை இடத்தை அளிக்க அரசாங்கம் முயற்சி செய்தால் விபரீத நிலைமையே ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ கூறினார்.

கண்டியில் இன்று (10/06/2021) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறுபடியும் ஒருமுறை இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தி சுதந்திரத்திற்கு முன் காணப்பட்ட நிலைமையை ஏற்படுத்த சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் தோன்றி இருக்கின்றது.

சுதந்திரத்திற்கு பின் பாடசாலைகள் அரசாங்கத்திற்கு மேற்கொள்ளப்பட்டதன் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இலவசக் கல்வி முறை மேலும் விரிவாக்கப்பட்டது.

நாட்டில் தற்போதாவாது முதன்முறையாக அரசு இல்லாத தனியார் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நிறுவனங்களாக இன்று சகல இடங்களிலும் தொடங்கியுள்ளன.

கல்வி விற்பனை செய்யப்படுகின்றது. சகல நாடுகளிலும் தாய்மொழியே அடிப்படை மொழி ஊடாக கொள்ள வேண்டுமென யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படியிருக்க குறித்த கொள்கைக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்கள் இன்று சூழ்ச்சி செய்து கல்வி முறையை மாற்றியமைக்கின்றனர்.

ஆகையால் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லமுடியாத நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

அமரர் பண்டாரநாயக்க உயர்கல்வி அமைச்சு சட்டத்தை எடுத்து வந்த வேளையில் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றால் கிராமங்களில் தோட்ட வேலைகளை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என விமர்சித்தார்கள்.

இதன்போது, மறுபடியும் ஒருமுறை ஆங்கில மொழியை முதன்மைப்படுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை அரசாங்கம் வெளியிட்டு இருக்கின்றதால் முன்னராகவே காணப்பட்ட விபரீத நிலைமை மீண்டும் ஏற்படலாம். இதற்கு எதிராக நாங்கள் செயற்பட வேண்டும்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?