0044 7426740259

கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகை..!

s.திலோ June 10, 2021

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற செலன்திவ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் ஊடாக வெளியாருக்கு அளிக்கவிருப்பதாக தற்போது அதிகம் கதைக்கப்படுகின்றது.

Selendiva Holdings நிறுவனத்தின் அசையா சொத்து அபிவிருத்தியின் கீழ் குறிப்பிடப்பட்டு இருக்கும், காங்கேசன்துறையில் இருக்கும் சர்வதேச இணைப்பு நிலையம் உள்ள 5 ஏக்கர் பகுதி முதலீட்டுக்காக வழங்கப்பட இருப்பதாக அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேலும் கடற்படையினரின் வசமுள்ள, கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் எனும் பெயரில் இலங்கை முதலீட்டு சபையின் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட இருப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் பற்றி ஒரு மாதத்திற்கு முன் நகர அபிவிருத்தி அதிகார சபை தகவல்களைக் கோரியதாகவும் தம்மிடம் காணப்பட்ட தகவல்களை அவர்களுக்கு அளித்ததாகவும் தெல்லிப்பழை பிரதேச செயலகம் கூறியது.

வலிகாமம் வடக்கின் பெரும்பகுதி படையினரின் ஆக்கிரமிப்பில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் கீரிமலையில் குறித்த கட்டடம் அமைக்கப்பட்டது.

J/226 நகுலேஸ்வரம் கிராமசேவகர் பிரிவில் ஏறத்தாழ 50 ஏக்கர் நிலம் கடற்படையினர் வசமுள்ள போதும் 7 ஏக்கர் நிலத்தில் அந்த மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாகவும் குறித்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.

யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்திய முதலீட்டில் விஸ்தரிக்கப்பட்ட பலாலி விமான நிலையத்திலிருந்து ஏறத்தாழ 5.5 கிலோமீட்டர் தொலைவிலும் கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் அமைவிடம் காணப்படுகின்றது.

மக்களின் நிலத்தில் அடாத்தாக கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த மாளிகை வெளியாருக்கு கூறுவிலை ஊடாக வழங்கப்பட இருக்கின்றமை தொடர்பில் சில தரப்பினர் இன்று அதிருப்தி வெளியிட்டனர்

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?