0044 7426740259

வெளியானது ரெட்மிபுக் டீசர்..!!!

P. அனு July 22, 2021

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நேற்று ரெட்மி நோட் 10T ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெளியீட்டு நிகழ்வின் முடிவில், இந்த பிராண்ட் தனது முதல் மடிக்கணினியான ரெட்மி புக்கிற்கான இந்திய அறிமுகம் குறித்த டீஸரையும் வெளியிட்டது.

நேற்று யூடியூப்பில் நேரடி ஸ்ட்ரீமிங் நிகழ்வின் போது மடிக்கணினி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ரெட்மி உறுதிப்படுத்தியது.

அந்த டீசரில் “RedmiBoo” என்ற முழுமையடையாத சொல் இடம்பெற்றது, இது பிராண்டின் நோட்புக் லேப்டாப் தொடரைக் குறிப்பதாக தெரிகிறது. இது இந்தியாவில் முதல் ரெட்மி லேப்டாப் ஆக இருக்கும்.

ஏற்கனவே ரெட்மியிடம் இருந்து பவர் பேங்க்ஸ், இயர்பட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர்ஸ் போன்ற தயாரிப்புகள் கிடைக்கின்றன. இந்த வரிசையில் மிக விரைவில் லேப்டாப்களும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் முதல் ரெட்மி டிவியையும் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இப்போதைக்கு, சாதனத்தின் சரியான வெளியீடு அல்லது அதன் விற்பனை விவரம் குறித்த தகவல் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறுவனம் அதன் அறிமுகம் குறித்த முன்னோட்டத்தை வெளியிடுவதால், வெளியீடு விரைவில் இந்தியாவில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகமானதும், இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ரியல்மீ புக் லேப்டாப்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
டிராகன் ஃப்ரூட் ஸ்மூத்தி...!!!