0044 7426740259

எனது சிறப்பான ஆட்டத்திற்கு முழு காரணமும் இவர் தான்..!!

P. அனு July 22, 2021

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய தீபக் சாஹர், தனது சிறப்பான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆலோசனைகளே காரணம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், இஷான் கிஷன், மணிஷ் பாண்டே போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

நீண்டநேரம் தன்னந்தனியாக போராடிய சூர்யகுமார் யாதவும் 53 ரன்களில் விக்கெட்டை இழந்துவிட்டதால், இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என கருதப்பட்ட நிலையில், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தீபக் சாஹர் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரளவைக்கும் வகையிலான விளையாட்டை வெளிப்படுத்தினார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட தீபக் சாஹர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 82 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 49வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பேசு பொருளாக மாறியுள்ள தீபக் சாஹர், தனது சிறப்பான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆலோசனைகள் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தீபக் சாஹர் பேசுகையில், “நான் களத்திற்குள் செல்லும்போது என் மனதில் ஒன்றே ஒன்றுதான் ஓடிக்கொண்டிருந்தது. நாட்டுக்காக வெற்றியை தேடிக்கொடுக்கும் வாய்ப்பை கிடைக்கும் இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எனவே சிறப்பாக ஆட வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதில் இருந்தது. ராகுல் சார் அனைத்து பந்துகளையும் என்னை ஆடச்சொன்னார். ராகுல் சாரின் பயிற்சியில் இந்தியா ஏ அணிக்காக நிறைய ஆடியிருக்கிறேன்.

அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். என் மீது ராகுல் சார் வைத்த நம்பிக்கை தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
கருப்பட்டி இட்லி..!!!