0044 7426740259

ஆப்பிள் விதைகள் விஷமா..!!!

P. அனு September 08, 2021

உங்கள் எல்லோருக்குமே தெரியும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் செல்ல வேண்டிய தேவையே இல்லை என்பது. ஆனால், ஆப்பிள் விதை விஷம் என்றும், அது நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால் சாப்பிட்டால் மரணம் கூட நிகழலாம் என்று சொல்கிறார்களே அது உண்மையா? உண்மையான தகவல் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆப்பிள் ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான, ஆனால் இந்த சத்தான பழம் குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் ஆபத்தானதும் கூட. ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை கொண்டவை என்பதும் அவற்றை சாப்பிட்டால் மரணம் நிகழும் என்பது உண்மைதான்.

ஆப்பிள் விதைகளில் அமிக்டலின் (Amygdalin) உள்ளது, இது மனித செரிமான நொதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது சையனைடை வெளியிடுகிறது. அமிக்டாலினில் சையனைடு மற்றும் சர்க்கரை உள்ளது, இது உட்கொள்ளும்போது உடலில் ஹைட்ரஜன் சயனைடாக (HCN) மாற்றப்படுகிறது.

இந்த சையனைடு உங்களை நோய்வாய்ப்படுத்தலாம் மற்றும் உங்களைக் கொல்லவும் கூட வாய்ப்புண்டு. ஆனால் விதைகளை தற்செயலாக உட்கொள்வதால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படாது. தற்செயலாக அதிக அளவிலான விதைகளை சாப்பிட நேர்ந்தால், இதன் விஷத்தன்மை மரணத்தை ஏற்படுத்தும்.

சையனைடு எப்படி வேலை செய்யும்?

பழைய படங்களில் எல்லாம் வில்லன்கள் கழுத்திலேயே சையனைடை மாட்டிக்கொண்டு சுற்றுவதையும், நேரில் காவலரிடம் அகப்பட்டுக்கொண்டால், அதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்வது போன்ற காட்சிகளைப் பார்த்திருப்போம். அது உண்மையிலேயே சாத்தியமா என்றால், சாத்தியம் தான். அது எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.

ஆக்ஸிஜன் விநியோகத்தில் குறுக்கிட்டு சையனைடு வேலை செய்கிறது. இரசாயன வடிவத்தைத் தவிர, பாதாமி, செர்ரி, பிளம், பீச் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட சில பழங்களின் விதைகளிலும் இந்த சையனைடு காணப்படுகிறது.

இந்த விதைகளில் கடினமான பாதுகாப்பு பூச்சு உள்ளது, இது அமிக்டாலினுக்குள் மூடுகிறது. விதைகளின் இந்த வலுவான பாதுகாப்பு அடுக்கு செரிமான சாறுகளுடன் சேர்வதை எதிர்க்கும். இதனால் நாம் அவ்வவ்போது விதையோடு சாப்பிட்டாலும் நமக்கு எந்த சிக்கலும் ஏற்படுவதில்லை.

சையனைடு எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்தது?

சுமார் 200 அரைக்கப்பட்ட ஆப்பிள் விதைகள், மனித உயிரைக் காவு வாங்கிவிடும் அளவுக்கு ஆபத்தானது. சையனைடு உங்கள் இதயம் மற்றும் மூளையை சேதப்படுத்தும். இது அரிதான சந்தர்ப்பங்களில் கோமா மற்றும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.

உண்மையில், அதிக அளவில் உட்கொண்டால், வலிப்பு, மூச்சுத் திணறல், நடுக்கம், பிடிப்பு, அதிகரித்த இதயத் துடிப்பு, சுவாசக் கோளாறு, குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதோடு, இவை அனைத்தும் உடனடியாக நினைவு இழப்புக்கும் வழிவகுக்கும். விஷத்தால் தப்பிப்பிழைப்பவர்களுக்கு இதயம் மற்றும் மூளை சேதமடையவும் வாய்ப்புண்டு.

மேலும், குறைந்த அளவு சையனைடு குமட்டல், தலைவலி, வாந்தி, வயிற்று வலி, தலைசுற்றல், குழப்பம் மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சையனைடின் விஷத்தன்மையின் விளைவு அவர்களின் உடல் எடையைப் பொறுத்தது. இன்னும் துல்லியமாகச் சொன்னால், ஒரு மனித உடலுக்கு ஒரு கிலோவுக்கு 0.5 முதல் 3.5 மி.கி சையனைடு விஷமாக இருக்கும். இது ஒருவரின் தனிப்பட்ட சகிப்புத்தன்மை மற்றும் ஆப்பிள் வகையைப் பொறுத்தது.

1 கிராம் ஆப்பிள் விதைகளில் 0.06-0.24 மி.கி சையனைடு உள்ளது. விதைகளின் அளவு அதிகம் ஆகும் போது அவற்றின் விஷத்தன்மையும் அதிகமாகும்.

எனவே, ஆப்பிள் நீங்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால், ஆப்பிள் விதைகளை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!