0044 7426740259

ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ள தகவல்...!!!

P. அனு September 08, 2021

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒருவகை பாம்பின் விஷம் பயன்படுவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சென்ற இரு ஆண்டாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் கொரோனா வைரஸ் இன்றளவும் அதன் பரவல் குறைந்தப்பாடில்லை. ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் வந்தாலும் மூன்றே மாதங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு போடும் அளவிற்கு பரவி விடுகிறது.

தற்போது வரை பரிசோதனை முறையிலேயே இருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் 100% கொரோனோவை கட்டுப்படுத்தும் என உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஒருவகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு ஒன்று, குரங்கின் செல்களில் வளரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பாம்பு ஜரரகசு பிட் வைப்பர் என்ற வகையை சார்ந்தது. இந்த பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் மூலக்கூறு குரங்கின் உடலில் வைரஸ் பரவும் திறனை 75% குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக சாவோ பவுலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரபேல் கைடோ கூறும்போது, எங்களுடைய ஆராய்ச்சியின் போது கொரோனா வைரஸ் வெளியிடும் முக்கிய புரதத்தை பாம்பின் விஷம் கட்டுப்படுத்துவதை எங்களால் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது' என தெரிவித்தார்.

மேலும், சாவோ பவுலோவில் உயிரியல் சேகரிப்பு ஆய்வகத்தை நடத்திவரும் ஊர்வன நிபுணர் கியூசெப் பூர்டோ பாம்பை பிடித்து வளர்ப்பதன் மூலம் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை உள்ளடக்கிய பெப்டைட்டை ஆய்வகத்தில் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!