0044 7426740259

டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புது அப்டேட்…!!

P. அனு September 08, 2021

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் “டான்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சிவகார்த்திகேயன் தாஜ்மஹாலில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் சில மாதம் நிறுத்தப்பட்டிருந்த “டான்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்குமுன்பு பொள்ளாச்சி, உடுமலைபேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவின் பெருமையும் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் “டாக்டர்“ திரைப்படத்திற்கு பிறகு இந்தப் படத்திலும் நடிகை பிரியங்கா அருள்மோகன் இணைந்து நடித்து வருகிறார்.

தாஜ்மஹாலில் நடைபெற்ற படப்பிடிப்பில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவும் கலந்து கொண்டுள்ளார். அதனால் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் வரும் டிசம்பரில் இந்தப் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!