0044 7426740259

சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை..!!!

P. அனு September 08, 2021

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (08.09.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு திறக்கப்படும்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கே சென்றால் இந்தத் தொற்றை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெக்கும்போது அந்தந்த பிரிவினரால் தற்போதே திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

திட்டம் வகுக்கப்பட்டால் மட்டுமே நாட்டை திறக்க முடியுமா என்பது தொடர்பாக தீர்மானிக்க முடியுமென்றும் அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டை திறப்பதில் சிக்கல் நிலை ஏற்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!