0044 7426740259

கங்குலி தான் மிகச் சிறந்த கேப்டன்..!!!

P. அனு September 08, 2021

சமீபத்தில் ஒரு உரையாடலில் இந்திய அணியின் முன்னாள் ஓபனிங் வீரர் வீரேந்திர சேவாக் மகேந்திர சிங் தோனி மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் மிகச் சிறந்த கேப்டன்கள் என்றும் இருவரில் தோனியை விட கங்குலி தான் மிகச் சிறந்த கேப்டன் என கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனியை விட சவுரவ் கங்குலி தான் மிகச் சிறந்த கேப்டன் - விரேந்திர சேவாக் விளக்கம் 2இதுபற்றி விளக்கமாக பேசிய விரேந்திர சேவாக், மகேந்திர சிங் தோனியின் கதை வேறு.

அவர் இந்திய அணிக்கு கேப்டனாக வேளையில் இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவருக்கு அந்த வீரர்களின் துணை இருந்தது. மேலும் அவர் ஒரு சிலர் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அனைத்து ரீதியிலும் மிகச் சிறந்த அணியாக செட் செய்தார்.

ஆனால் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு கேப்டன் ஆன வேளையில் இந்திய அணியில் 1-2 வீரர்களை தவிர்த்து வேறு யாரும் பேர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. இந்திய அணியை முழுவதுமாக அவர் கட்டமைத்தார். ஒரு புதிய இந்திய அணியை அவர் மிகத் துணிச்சலாக உருவாக்கினார்.

அவரது தலைமையில் நாங்கள் இந்தியாவை தவிர்த்து வெளியூர் மைதானங்களில் வெற்றியும் கண்டோம். அவரது தலைமையின் கீழ் இந்தியாவை தாண்டி வெளியூர் மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும், அதே சமயம் எப்படி வெற்றி பெற வேண்டும் என்கிற விஷயத்தை கற்றுக் கொண்டோம்.

இந்திய அணிக்கு அடிவேராக அவர் செயல்பட்டார் எனவே அவரே மிகச் சிறந்த கேப்டன் என்று சேவாக் விளக்கம் தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது, ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக்கொண்டிருந்தது.

அப்பொழுது இந்திய அணியில் சேவாக் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சேவாக் 199 ரன்கள் இருந்த நிலையில் முத்தையா முரளிதரன் வீசிய ஒரு ஓவரில் ரன் ஓட சேவாக் மறுத்துவிட்டார்.

ஏன் அந்த ஒரு ரன்னை நீங்கள் ஓடவில்லை என்று கேட்ட கேள்விக்கு, அந்த ஒரு விக்கெட் விழுந்துவிட்டால் இந்திய அணி ஆல் அவுட் ஆகிவிடும். அப்பொழுது நான் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தேன் எனது எதிர்முனையில் இசாந்த் சர்மா விளையாடிக் கொண்டிருந்தார்.

முத்தையா முரளிதரன் மிக அற்புதமாக பந்துவீசி வந்த வேளையில் நான் அந்த ஒரு ரன் ஓடி இருந்தால், சில வினாடிகளிலேயே இசாந்த் சர்மா அவுட்டாகி விடுவார் என எனக்கு தோன்றியது. எனவே இன்னும் சில ரன்கள் சேர்க்கும் விதமாக நான் அந்த ரன் ஓடும் மறுத்து விட்டேன் என்று சேவாக் கூறியுள்ளார்.

இருப்பினும் கேப்பில் பந்து சென்று விட நாங்கள் ஒரு ரன் ஓடி விட்டோம் என்றும், நான் கணித்தது போலவே அதற்கு அடுத்த சில நிமிடங்களில் இசாந்த் சர்மா விக்கெட்டை இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி விட்டனர் என்றும் சேவாக் கூறி முடித்தார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!