0044 7426740259

பைசர் நிறுவனம் தகவல்...!

L.சுதா September 21, 2021

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மேலும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை தயாரித்தன. அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே பைசர் நிறுவனம் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பரிசோதனையை முன்னெடுத்தது. இதற்காக அந்த வயதுகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதில் பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் 3-ல் ஒரு பங்கு மருந்து மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. இந்த நிலையில் பைசர் நிறுவன தடுப்பூசி 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நல்ல பலனை தருவதாக பைசர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

3-ல் ஒரு பங்கு மருந்தை 2 டோஸ் போட்டதற்கே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவானது தெரிய வந்தது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களை போலவே வலிமையுடன் உள்ளனர். அதே வேளையில் மற்ற இளம் வயதினர் போலவே அவர்களுக்கும் காய்ச்சல், உடல் வலி போன்றவை ஏற்பட்டன என பைசர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து 5- 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அங்கீகாரத்துக்காக பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் கூறும் போது, ‘‘எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது. ஆகவே அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அங்கீகாரம் கோரி இந்த மாதம் விண்ணப்பிக்கவுள்ளோம்.

அதன் பின் ஐரோப்பியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். இந்த வயது குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் பைசர் நிறுவனம் 60 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஆரம்ப பாடசாலை வயது குழந்தைகளுக்கு செலுத்தி சோதனையை நடத்தி வருகிறது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!