0044 7426740259

கங்குலி போல் உருவாக வேண்டும்...!!

L.சுதா September 25, 2021

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் அய்யர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்களும் (7 பவுண்டரி, ஒரு சிக்சர்), மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 53 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) நொறுக்கி வெற்றியையும் எளிதாக்கியமை அறியத்தக்கது.

தனது முதல் இரண்டு ஐ.பி.எல். போட்டியிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்ட வெங்கடேஷ் அய்யர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர். ஏலத்தில் அடிப்படை தொகையான ரூ.2,000,000ற்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஐ.பி.எல்.-ல் எனது பயணம் கொல்கத்தா அணி மூலமே தொடங்க வேண்டும் என விரும்பினேன்.

காரணம், எனது மானசீக குரு சவுரவ் கங்குலி. ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்கு அவர் தலைவனாக இருந்ததால், கொல்கத்தா அணி என்னை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். அது போலவே அவர்கள் என்னை ஏலத்தில் எடுத்த போது கனவு தருணம் போல் காணப்பட்டது.

நான் கங்குலியின் மிகத் தீவிர இரசிகர். அவருக்கு உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான இரசிகர்கள் காணப்பட்டனர். அவர்களில் நானும் ஒருவன். எனது பேட்டிங் திறமையில் மறைமுகமாக கங்குலி முக்கிய பங்கு வகிக்கிறார்.

அவரது பேட்டிங், சிக்சர் விளாசும் விதம், பந்து வீச்சு எல்லாமே என்னையும் அறியாமல் எனக்குள் பதிவாகி கொண்டே இருந்தது. அதனால் தான் சிறு வயதில் வலதுகை பேட்ஸ்மேனாக இருந்த நான் முற்றிலும் அவரை போல் ஆக வேண்டும் என்பதற்காக பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொண்டு இடது கை பேட்ஸ்மேனாக மாறினேன் என தெரிவித்தார்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!