0044 7426740259

போதைப்பொருள் அடிமையாளர்களை வெளியேற்ற ...!!

L.சுதா September 25, 2021

பரிசில் jardins d’Eole பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் அடிமையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இந்த வெளியேற்ற நடவடிக்கை நடைபெற்று வருகின்றது. Porte de la Villette அண்மையில் உள்ள jardins d’Eole பூங்காவில் இந்த ‘போதைப்பொருள் அடிமையாளர்கள்’ குவிந்திருந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென 200 வரையான காவல்துறையினர் இங்கு குவிந்தனர்.

இங்கு அருகில் குடியிருப்பவர்களும், வதிவிட மக்களுக்குமான பொறுப்பினை நான் எடுத்துக்கொள்கின்றேன். சூழ்நிலை தற்போது மோசமாகியுள்ளது. இதை மேலும் தீவிரமடைய அனுமதிக்க முடியாது என பரிஸ் காவல்துறை பொறுப்பதிகாரி Didier Lallement குறிப்பிட்டார்.

இப்பகுதியில் குவிந்துள்ள போதைப்பொருள் அடிமையான இவர்களால், அண்மையில் வசிப்பவர்கள் தினம் தினம் அச்சத்திலேயே வசிக்கின்றனர்.

தினமும் வன்முறைகள் பதிவாகுவதுடன், பாலியல் பலாத்கார முயற்சிகளும், போதைப்பொருளை சிறுவர்களுக்கு பழக்கும் தீவிரமும் இடம்பெறுவதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். இந்நிலையிலேயே இவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!