0044 7426740259

முகத்தின் கருமையை போக்கும்...!!

L.சுதா September 27, 2021

முகத்தின் கருமை நீங்கி தங்கத்தை போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே உங்கள் அழகை மேலும் அழகாக்கி கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்: எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், தேன் - அரை டீஸ்பூன். இது அத்தனையும் உங்க வீட்டு சமையலறை பொருட்கள்தான். இதுதான் உங்களை அழகாக்குகிறது.

செய்முறை: ஒரு சுத்தமான பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது ஸ்க்ரப் தயார். அதனை கைகளை உபயோகித்து முகத்தில் தடவி லேசாக தேய்க்க வேண்டும். அதன் பின்னர், முகத்தை தண்ணீர் மற்றும் பஞ்சு உபயோகித்து துடைத்திடவும்.

இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முகம் சும்மா பிரகாசமாக ஜொலிக்கும். மிருதுவாகவும் மாறிவிடும்.

குறிப்பு 2: தேவையான பொருள்கள்:- காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் பால் -1 ½ டேபிள் ஸ்பூன் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் காபி பவுடரை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி துடைக்க வேண்டும்.

கலந்து வைத்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு மிதமான குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் மாஸ்க் வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கும்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!