0044 7426740259

முதல் வெற்றி...!!

L.சுதா October 12, 2021

13ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது. 05 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் 02 லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் (1-1), இலங்கையுடன் (0-0) சமநிலை அடைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த 3ஆவது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 107ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 168ஆவது இடத்தில் உள்ள நேபாளத்துடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் ஆடிய இந்திய அணி கோல் அடிக்க பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், நேபாளத்தின் தடுப்பு அரணை எளிதில் தகர்க்க முடியவில்லை.

கடைசியாக 82ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் தலைவன் சுனில் சேத்ரி இடது காலால் உதைத்து பந்தை கோல் வலைக்குள் திணித்தார்.

123ஆவது போட்டியில் ஆடிய சுனில் சேத்ரி அடித்த 77ஆவது கோல் இதுவாகும். இதன் ஊடாக சர்வதேச போட்டியில் தலா 77 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் பீலே (பிரேசில்), அலி மாப்ஹோட் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோரின் சாதனையை அவர் சமப்படுத்தினர்.

அதன் பிறகு பதில் கோல் திருப்ப நேபாளம் அணியினர் தீவிரம் காட்டினாலும், அவர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது. 03 லீக் ஆட்டங்கள் முடிவில் மாலத்தீவு, நேபாளம் அணிகள் தலா 02 வெற்றி, ஒரு தோல்வியுடன் 06 புள்ளிகள் பெற்று முதல் 02 இடங்களை வகிக்கின்றன.

நாளை (புதன்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மாலத்தீவுடன் (இரவு 9.30 மணி) மல்லுகட்டுகிறது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!