0044 7426740259

ஷபாலி வர்மா பின்னடைவு...!!

L.சுதா October 13, 2021

பெண்களுக்கான டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் இடத்தை இழந்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் 726 புள்ளிகளுடன் 02ஆவது இடம்பிடித்து பின்னடைந்துள்ளார்.

அதே போல் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 754 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடம் பெற்றார். மற்றோரு இந்திய வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா 709 புள்ளிகளுடன் 03ஆம் இடம் பிடித்துள்ளார்.

அதே போல் ஆஸ்திரேலிய அணியின் தலைவன் மெக் லான்னிங் 698 புள்ளிகளுடன் தரவரிசையில் 04ஆவது இடத்தையும் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி 673 புள்ளிகளுடன் தரவரிசையில் 06ஆவது இடமும் பிடித்துள்ளனர்.

அண்மையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது அறியத்தக்கது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!