0044 7426740259

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு...!!

L.சுதா October 13, 2021

தமிழ்நாடு அளவிலான 19ஆவது மாநில எறிபந்து போட்டி விருத்தாசலம் சி.எஸ்.எம். கலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. 03 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் கொண்ட அணியினர் பங்குபற்றினர்.

எறிபந்து போட்டியை விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போட்டிகள் அனைத்தும் நடைபெற்று முடிந்தவுடன் கல்லூரி வளாகத்தில் நிறைவு விழா நடந்தது. இதற்கு தமிழ்நாடு எறிபந்து கழக தலைவர் பாலவிநாயகம் தலைமை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வெ.கணேசன் பங்குபற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக கடலூர் மாவட்ட எறிபந்து கழக தலைவர் திருமால்வளவன் அனைவரையும் வரவேற்றார்.

கஸ்டம்ஸ் உதவி ஆணையாளர் அழகேசன், துணை கலெக்டர் செல்வபாண்டி, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், சி.எஸ்.எம். கல்லூரியின் தலைவர் வழக்கறிஞ்ஞர் மணிகண்ட ராஜன், செயலாளர் அபிதாகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் சி.எஸ்.எம். கல்லூரியின் பொருளாளர் காமராஜ் நன்றி கூறினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட எறிபந்து சங்க செயலாளர் ராஜராஜசோழன் செய்திருந்தார். போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சென்னை முதல் இடமும், கரூர் 2ஆம் இடமும், நீலகிரி 3ஆம் இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் சென்னை முதல் இடம், திருவள்ளூர் 2ஆம் இடமும், செங்கல்பட்டு 3ஆம் இடமும் பிடித்தன.

இப்போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்டு தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணி வருகிற 20, 21, 22, 23 ஆகிய 04 நாட்கள் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளது என்பது அறியத்தக்கது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!