0044 7426740259

ரியல்மீ X7, X7 புரோ 5G ஸ்மார்ட்போன்களின் விலைகள்..!!!

P. அனு September 08, 2021

2021 செப்டம்பர் மாதத்திற்கான ஃப்ளிப்கார்ட் கார்னிவல் விற்பனை இ-காமர்ஸ் தளத்தில் தற்போது நேரலையில் உள்ளது.

இது செப்டம்பர் 8 வரை இயங்கும் ரியல்மீ X7 மற்றும் X7 புரோ 5ஜி சாதனங்கள் இரண்டுமே ரூ.3,000 வரை விலை குறைப்பைப் பெற்றுள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள ரியல்மீ கைபேசிகளின் புதிய விலை விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரியல்மீ X7 5ஜி யின் டாப்-பெக் 8 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டு இப்போது ரூ.19,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் அசல் விலை ரூ.21,999 ஆகும். இருப்பினும், கைபேசியின் அடிப்படை 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அறிமுக விலையான அதே ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், ரூ.29,999 விலையில் விற்பனையாகும் ரியல்மீ X7 புரோ மாடலை இப்போது ரூ.26,999 விலையில் வாங்க முடியும. மேலும், ரியல்மீ X7 நெபுலா மற்றும் ஸ்பேஸ் சில்வர் வண்ண விருப்பங்களிலும் கிடைக்கிறது, அதே நேரத்தில் புரோ மாடல் பேண்டஸி மற்றும் மிஸ்டிக் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது.

ரியல்மீ X7 5G Vs ரியல்மீ X7 புரோ 5G: விவரக்குறிப்புகள்

*ரியல்மீ X7 6.4 இன்ச் முழு HD+ (1080 x 2,400 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்பிளே நிலையான 60 Hz refresh rate உடன் கிடைக்கும்.

*ரியல்மே X7 புரோ மாடல் சற்று பெரிய 6.55 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளே 120 Hz refresh rate மற்றும் 5 வது தலைமுறை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டிருக்கும்.

*ரியல்மீ X7 மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 800U 5G SoC உடன் இயக்கப்படுகிறது.

*ரியல்மீ X7 புரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ SoC உடன் இயக்கபடுகிறது, இது Dimensity 800U உடன் ஒப்பிடும்போது மிகவும் சக்தி வாய்ந்தது.

*பேட்டரி அம்சங்களைப் பொறுத்தவரை, ரியல்மீ X7 மாடல் 4,310 mAh பேட்டரி யூனிட் 50W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

*மறுபுறம், ரியல்மீ X7 புரோ 4,500 mAh பேட்டரி யூனிட்டைக் கொண்டிருக்கும், இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கும்.

*ரியல்மீ X7 5G இன் கேமரா 64MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றின் கலவையுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

*முன்பக்கத்தில், சாதனம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 MP சென்சார் கொண்டுள்ளது.

*மறுபுறம், புரோ வேரியண்டில் குவாட்-ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 64 MP பிரைமரி சென்சார், 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், ஒரு ஜோடி 2 MP போர்ட்ரெய்ட் மற்றும் மேக்ரோ ஷூட்டர்கள் உள்ளன.

*செல்ஃபி மற்றும் வீடியோக்களுக்கு, 32MP முன்பக்க கேமரா சென்சார் உள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!