0044 7426740259

5 வயசா இருக்கும்போது தூக்கத்துல இருந்து முழிச்சேன்..!!!

P. அனு September 08, 2021

சீனாவின் கிழக்கு மாகாணமான ஹெனானைச் சேர்ந்தவர் லி ஜானிங். இவருக்கு ஒரு விசித்திர வியாதி இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் மிரண்டு போயுள்ளார்கள்.

அதாவது லி ஜானிங் தனது 5 வயதில் ஒரு முறை தூக்கத்திலிருந்து விழித்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் தூங்கவே இல்லை என்பது தான் பலருக்கும் ஆச்சரியம்.

பல ஆண்டுகளுக்கு முன், லி ஜானிங்யின் இந்த கூற்றைச் சோதிக்கப் பலர் முயன்று, கடைசியில் அவர்கள் தூங்கிப் போனார்கள். ஆனால் லி ஜானிங் மட்டும் தூக்கமில்லாமல், புத்துணர்வுடன் காணப்பட்டுள்ளார்.

லி ஜானிங்யின் கணவரும் தமது மனைவி தூங்குவதைத் தாம் இதுவரை பார்த்ததில்லை என உறுதி செய்துள்ளார். ஊரே தூக்கத்தில் இருக்கும் போது லி ஜானிங், வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் மும்முரமாக இருப்பார் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

மனைவியின் இந்த தூங்காத நிலையால் கவலை கொண்ட அவரது கணவர், தூக்க மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அதனாலும் பலனேதும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே மருத்துவர்கள் குழு முன்னெடுத்த தீவிர பரிசோதனையில், லி ஜானிங் தூங்குகிறார், ஆனால் அது விசித்திரமான முறையில் நடக்கிறது எனக் கண்டறிந்தனர்.

லி ஜானிங் தனது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது கண் இமைகள் கவிழ்வதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுவே அவர் தூக்கத்தில் இருப்பதை உணர்த்துவதாகவும், ஆனால் அப்போதும் அவர் பேசிக் கொண்டிருந்ததை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், ஒரு நாளுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் அவரது கண்கள் மூடவில்லை என்பதையும் வைத்தியர்கள் சோதனையில் கண்டறிந்துள்ளனர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!