0044 7426740259

Audi Skysphere..!!!

P. அனு September 08, 2021

ஆடி ஸ்கைஸ்பியர் என்று அழைக்கப்படும் ஒரு புதிய அசத்தலான கான்செப்ட் காரை ஆடி அறிமுகம் செய்துள்ளது. இது முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும், இரண்டு-கதவுகள் கொண்ட கன்வெர்ட்டிபிள் கார் ஆகும். இந்த கான்செப்ட் கார் ஆடி பிராண்டின் எதிர்கால வடிவமைப்பைக் காட்டுகிறது.

ஆடி ஸ்கைஸ்பியர் காரின் மையம் ஈர்க்கும் அம்சம் என்றால் அதன் உட்புறம் தான். மிகவும் பிரமாண்டமான, சௌகரியமான இடவசதி இருப்பது மட்டமல்லாமல், டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புடன் ஆட்டோமேட்டிக் டிரைவிங் வசதியையும் கொண்டுள்ளது.

புது விதமான டூரிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட ஆடி ஸ்கைஸ்பியர் ஒரு மாறுபடும் வீல்பேஸ் உடன் உள்ளது. அதாவது இந்த ஆடி ஸ்கைஸ்பியரின் நீளத்தை டிரைவ் பயன்முறையைப் பொறுத்து 250 மிமீ வரை அடஜஸ்ட் செய்து கொள்ள முடியும், அதோடு அதன் கிரவுண்ட் கிளியரன்ஸை 10 மிமீ வரை அடஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.

பழைய வாகனங்களில் வழக்கமாக இருக்கும் ரேடியேட்டர் கிரில் எல்லாம் இதில் இல்லை. மின்சார வாகனம் என்பதால் அதற்கான தேவையும் இல்லை. ஆடி ஸ்கைஸ்பியரின் முன்பக்கத்தில் 3D வடிவமைப்புடன் ஒளிரும் ஆடி நிறுவனத்தின் அடையாளமான நான்கு வளையங்கள் ஒளிர்கின்றன. முழு ஃபிரேமும் வெள்ளை LED லைட்டுகளுடன் மிளிர்கிறது.

முன் பக்கப் பிரிவுகளில் உள்ள DRLs, லைட்டிங் யூனிட்கள் காருக்கு ஒரு அற்புதமான தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஒரு பட்டனைத் தொட்டால், 4,940 மிமீ நீளமுள்ள மின்சார ரோட்ஸ்டரை குறைக்கப்பட்ட வீல்பேஸுடன் “ஸ்போர்ட்ஸ்” பயன்முறையில் இயக்கலாம். அப்படி இல்லை என்றால் மறுபடியும் ஒரு பட்டனைத் தட்டினால் 5,190 மிமீ நீளமான வீல்பேஸ் உடன் GT வெர்சனில் தன்னாட்சி பயன்முறையில் வாகனத்தை இயக்க முடியும்.

நீங்கள் இந்த GT வெர்சனை இயக்கம்போது ஸ்டீயரிங் மற்றும் பெடல்கள் எல்லாம் அதற்கென இருக்கும் இடங்களில் கண்ணுக்கு தெரியாதவாறு மறைந்துவிடும்.

தன்னாட்சி முறையில் ஸ்கைஸ்பியர் தானாகவே சாலை மற்றும் போக்குவரத்தை அதன் சென்சார் அமைப்பின் உதவியுடன் கண்காணிக்கும்.

பின்புற அச்சில் வைக்கப்பட்டுள்ள ஒரு மின்சார மோட்டார் மொத்தம் 465 kW ஆற்றல் மற்றும் 750 Nm திருப்புவிசையை வழங்கும். மொத்தம் 1,800 கிலோ எடைக்கொண்ட இந்த கான்செப்ட் EV அதன் எடையில் 60 சதவீதம் வரை பின்புற அச்சிலேயே உள்ளது.

இந்த ஆடி ஸ்கைஸ்பியர் வெறும் 4 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. இதில் உள்ள பேட்டரியின் திறன் 80kWh க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WLTP தரத்தின்படி, ஒரு முறை சார்ஜ் செய்தால் GT முறையில் இந்த ஆடி ஸ்கைஸ்பியர் 500 கிமீக்கு மேல் பயணவரம்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.

ஆர்ட் டெகோ யூனிவெர்ஸ் இடமிருந்து ஈர்க்கப்பட்ட ஆடி ஸ்கைஸ்பியரின் உட்புறம் தோற்றம் ஒரு விசாலமான சூழலுடன் தோன்றுகிறது. பக்கங்களில் ஆதரவு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கைகள் மிகவும் அழகாக உள்ளன. இருக்கைகள் மைக்ரோ ஃபைபர் துணியால் மெருகூட்டப்பட்டுள்ளன.

டிரைவர் மூலம் இயக்கப்படும் பயன்முறையில், சென்டர் கன்சோலில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் மானிட்டர் பேனல் பின்புறம் நகர்ந்து, டிரைவருக்கு சிறந்த இருக்கை நிலையை பெற உதவியாக இருக்கும்.

இதில் உள்ள டாஷ்போர்டு 1415 மிமீ அகலம் மற்றும் 180 மிமீ உயரம் கொண்ட பெரிய டச் மானிட்டர் சர்ஃபேஸ் உடன் உள்ளது. சென்டர் கன்சோலின் மேல் பகுதி வாகனம் மற்றும் இன்போடெயின்மென்ட் அமைப்புகளை இயக்கப் பயன்படுகிறது.

கிராண்ட் டூரிங் பயன்முறையில், இணையம், வீடியோ கான்ஃபரன்ஸ் அல்லது திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்து உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும். கதவுகளில் உள்ள சிறிய டச் பேனல்கள் காற்றுச்சீரமைப்பை இயக்க பயன்படுகிறது. உயர்தர ஒலி அமைப்பு ஒட்டுமொத்த அனுபவத்தையும் ஒருங்கிணைக்கிறது.

ஆடி ஸ்கைஸ்பியர், ஆடி கிராண்ட்ஸ்பியர் மற்றும், ஆடி அர்பன்ஸ்பியர் ஆகிய மூன்று கான்செப்ட் கார்களும் ஆடி பிராண்டின் எதிர்கால திட்டமாக உள்ளது. இந்த கார்கள் அனைத்துமே முற்றிலும் மின்சார மயமாக்கப்பட்ட கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!