0044 7426740259

Vivo Y21s..!!!

P. அனு September 08, 2021

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான Vivo Y21s ஐ இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. Vivo Y21s கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Y21 போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் விவோ Y21 உடன் மிகவும் ஒத்திருக்கிறது. இதன் முக்கிய வேறுபாடு என்றால் கேமரா மற்றும் செயலி ஆகியவை தான். Vivo Y21s மீடியாடெக் செயலி உடன் இயக்கப்படுகிறது மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்தோனேசியாவில் இந்த ஸ்மார்ட்போன் IDR 2,799,000 (தோராயமாக ரூ.14,400) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் – மிட்நைட் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய 2 வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தை உட்பட உலகளவில் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

விவோ Y21s ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது. ஸ்மார்ட்போனில் 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டாரேஜ் உள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 1 TB வரை விரிவாக்க முடியும். Vivo Y21s இல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

இதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் f/2.4 துளை கொண்ட மற்றொரு 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், Vivo Y21s 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியும் உள்ளது.

இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, Vivo Y21s சார்ஜ் செய்வதற்கு USB டைப்-C போர்ட், ப்ளூடூத் 5.0, டூயல் சிம் இணைப்பு, 4G, GPS, USB OTG மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!